தடாகம்: வாலிபர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் தடாகம் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் சேம்பரில் ராகவன் என்பவர் இறந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ.3) கண்டெடுக்கப்பட்டார். இவர் ஆறு மாதங்களாக மனைவியைப் பிரிந்து வசித்து வந்ததாகவும், குடிபோதைக்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி