கோவை அழகு நிலையத்தில் விபச்சாரம்: மேலாளர் கைது

கோவையில் பீளமேடு, ஹோப் காலேஜ் அருகேயுள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த அழகு நிலையத்தில் விபச்சாரம் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரகசிய தகவலின் பேரில் அங்கு சோதனை நடத்திய பீளமேடு காவல்துறையினர், அழகு நிலைய மேலாளர் அறிவழகனை (29) இன்று கைது செய்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன், இந்த அழகு நிலையத்தை நடத்தி வந்ததாகத் தெரிகிறது. சோதனையின்போது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி