கோவை: மகளிர் குழுக்களுக்கு காசோலை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தின் நரசிபுரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வேளாண்மை, மகளிர் திட்டம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் அமைத்த அரங்குகளை பார்வையிட்டார். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலப்பெட்டகம், 5 பேருக்கு மருந்து பெட்டகம், 1 விவசாயிக்கு மின்கலன் தெளிப்பான், 2 பேருக்கு தார்ப்பாய், 5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 15.16 இலட்சம் மதிப்பில் தொழில் தொடங்க காசோலை வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கலெக்டர் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி