கோவை மாணவி பலாத்கார விவகாரத்தில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டன பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
நன்றி: annamalai_k