முதல்வர் வேட்பாளர் விஜய்.. ஜெயக்குமார் சொன்ன பதில்

2026 சட்டமன்ற தேர்தலின் முதல்வர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் முன்னிறுத்தப்படுவதாக தவெக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஒரு கட்சியின் தலைவர் தனித்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். எங்கள் தலைமையில் கூட்டணி என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால், தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் பதிலளித்துள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி