சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதவர்கள், தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.