பிரேமலதாவின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா, சுதீஷின் தாயார் அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று காலை (அக்., 07) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

நன்றி: News18

தொடர்புடைய செய்தி