நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி சின்னத்திரை, வண்ணத்திரை என விரிந்து மக்களை மகிழ்வித்தவர். ரோபோ சங்கரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.