அடுக்குமாடிகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது.. அரசு உத்தரவு

அடுக்குமாடி குடியிருப்புகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்போது தற்காலிகமாக இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி, மீண்டும் இணைப்பு வழங்க ரூ. 2, 000 செலவாகும். இந்நிலையில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை மறுவடிவமைப்பு செய்யும்போது அதற்காக தற்காலிக மின் இணைப்பு வழங்க கூடாது என மின்வாரிய பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சேவைகளை நிரந்தரமாக துண்டிக்க கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது மேல்நிலை கம்பிகள் அல்லது நிலத்தடி புதைவடங்கள் மூலம் வழங்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து, மும்முனை வீட்டு இணைப்புக்கு ரூ. 12, 000 முதல் ரூ. 24, 000 வரை செலவாகும். மேலும் தனி வீடுகளில் கூடுதல் தளம் கட்டும் பணிகள் அல்லது மறுவடிவமைப்பு பணிகளுக்கு ஒராண்டுக்கு மேல் தற்காலிக இணைப்பு வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி