விசாரணையில் சரோஜா, தன்னுடைய வீட்டில் சாய்பாபா சிலை வைத்து சாமி கும்பிட்டு வருவது தெரியவந்தது. அதனால் சாய்பாபாவை கும்பிட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் சரோஜாவின் வீட்டுக்கு வருவதுண்டு. அதனால் தங்க நகைகள் திருட்டுப் போனதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை, சாமி கும்பிட வந்தவர்களின் மீதும் விழுந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சி. சி. டி. வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கினர். அப்போது பெண் ஒருவர் சரோஜாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பின்னர் பைக்கில் ஆண் ஒருவருடன் செல்லும் காட்சி போலீஸாரின் கண்ணில் பட்டது. அந்த பைக்கின் பதிவு நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது அது போலி எனத் தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பைக் செல்லும் வழியில் உள்ள சி. சி. டி. வி கேமராக்களை அடுத்தடுத்து போலீஸார் செய்தனர். இப்படி 150-க்கும் மேற்பட்ட சி. சி. டி. வி-க்களை ஆய்வு செய்தபிறகு தங்க நகைகளைத் திருடிய கும்பலை போலீஸார் பிடித்தனர்.