குவைத் நாட்டில் இருந்து 150 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், தஞ்சையைச் சேர்ந்த சேக் முகமது என்பவர் புகைப்பிடித்தார். சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.