சென்னை: பெண் காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி

வெட்டுவாங்கேணியில் காவலாளியாக பணிபுரியும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முனியம்மா (50), பக்கத்து வீட்டுக்காரர் முகமது இஸ்தகின் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார். முனியம்மா தூங்கும்போது முகமது இஸ்தகின் தலையில் கல்லைப்போட்டுள்ளார். படுகாயமடைந்த முனியம்மா சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து நீலாங்கரை போலீசார் நேற்று (நவ.3) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி