துரைப்பாக்கம்: மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருட்கள் திருட்டு: இருவர் கைது

துரைப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்தீஸ்வரன் (24) மற்றும் ராஜமுத்துகுமரன் (19) ஆகியோர் இரும்புப் பொருட்கள் மற்றும் அலுமினிய ஏணியைத் திருட முயன்றபோது காவலாளியால் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 45 கிலோ இரும்புப் பொருட்கள், அலுமினிய ஏணி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி