ஆலங்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் இன்று (நவம்பர் 4) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சற்றுமுன் அண்ணா அறிவாலயம் வந்த இவர், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இன்று மாலை எம்எல்ஏ பதவியை மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஆவார்.