ரூ. 1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அறப்போர் இயக்கம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-21 அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட செய்தி தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.