சென்னை: பிறந்தநாளில் தகராறு.. பீர் பாட்டிலால் இளைஞர் மீது தாக்குதல்

புளியந்தோப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுமனின் மகன் சுதாகர், நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கச் சென்றபோது மது அருந்தச் சொன்னதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், நண்பர்கள் சுதேசி, அஜய் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சுதாகரை பீர் பாட்டிலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சுதாகரின் தலையில் ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி