சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உதவியாளர் துணையுடன் செல்போன் யு.டி.எஸ். (எம்-யு.டி.எஸ்.) சாதனத்தை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பயணிகளுக்கு விரைவாகவும் வசதியாகவும் டிக்கெட்டுகள் வழங்கப்படும். வழக்கமான டிக்கெட் கவுண்ட்டர்களில் நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இதன்மூலம் முன்பதிவு செய்யப்படாத சாதாரணப் பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் வழங்க முடியும்.