சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கவும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக சென்னையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சேத்துப்பட்டு பகுதியில் மக்கள் சாலையைக் கடப்பதற்கு வசதியாக கோடுகள் வரையப்பட்டுள்ளன.