சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னையில் 2,790 சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 3,562 சாலை வெட்டு சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட 5,147 சாலை பள்ளங்களில் 4,503 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பேருந்து வழித்தடங்களில் உள்ள சாலைகளைச் சீரமைக்க மண்டலத்திற்கு ரூ.1 கோடி வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.