சென்னையின் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுகுந்தன்(57) என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருட்கள், செல்போன் திருடியதாக மர்மநபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதன் பேரில், பிரபல கொள்ளையனான ஆகாஷ்(20) மற்றும் அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களை நேற்று காவல்துறை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தது.