சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் சென்னை செனடாப் சாலையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கவல் அறிந்த போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதே போல சென்னை சிபிஐ நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.