தமிழகத்தில் இன்று (அக்.18) இரவு 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுக்கவுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.