பாதி நீதிபதி பணியிடங்களுடன் செயல்படும் உயா்நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என எதிா்பாா்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதால் வழக்குகளை விரைந்து முடிக்க இயலாது எனத் தெரிவித்தனா்.