ரயில்களில் பயணத்தின் போது ஆபத்தை விளைவிக்கும் பட்டாசுகள், வெடிப் பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.