உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள பிரயாக்ராஜ்-கான்பூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஸ்கார்பியோ கார் ஒன்றில் டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்திற்குள் விழுந்துள்ளது. இதில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புப் பணிகளை மேற்கொண்டு, விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.