சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் கார் விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். முனியாண்டி என்பவர் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் அருகே திடீரென காரின் டயர் வெடித்துள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு மையத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், முனியாண்டி மற்றும் கணபதியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நன்றி: குமுதம்