பீகார் மாநிலத்தில் சொன்ன கருத்தை, தமிழ்நாட்டில் பேச முடியுமா? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். தருமபுரியில் இன்று (நவ.3) நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், “பீகாரில் பிரதமர் மோடி பேசிய கருத்தை, தமிழ்நாட்டில் பேச முடியுமா?. தைரியம் இருக்கிறதா?. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கு எதிராக பீகாரில் பிரதமர் தனது பேச்சின் மூலம் வன்மத்தை காட்டியுள்ளார்” என்றார்.
நன்றி:Sparkmedia