பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான போராட்டத்தை நடத்திய அவருக்கு இந்த பரிசை வழங்க முடிவு செய்துள்ளதாக நார்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.