நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள அவர் வீட்டிற்கு, மின்னஞ்சல் (Email) மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அவர் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
நன்றி:PT