இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று (அக். 15) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இளையராஜாவின் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. போலீசார் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி