நடிகை நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை நயன்தாரா வீட்டிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அண்மை நாட்களாக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, நடிகை த்ரிஷா, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பின்னர் அது புரளி என தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி