டெல்லி அரசு தனது பல சேவைகளை வாட்ஸ்அப் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இனி பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் விண்ணப்பித்து பெற முடியும். இந்த திட்டத்தில் சேர்ப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 சேவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 'வாட்ஸ்அப் மூலம் நிர்வாகம்' திட்டத்தின் கீழ், தற்போது ஆன்லைனில் கிடைக்கும் சேவைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருமொழி AI சாட்பாட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.