பைக் விபத்து.. கணவன் கண்முன்னே மனைவி உடல்நசுங்கி பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெண் ஒருவர் தனது கணவன் கண்முன்னே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஓம் - அனுராதா தம்பதி நேற்று மாலை (அக்.9) சந்தைக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, சாலையில் எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், லாரியின் பின் பக்க டயரில் சிக்கிய அனுராதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி