பீகார் சட்டமன்ற தேர்தல் வரும் நவ.22-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ள ஆணையம், அதற்கான வியூகங்களையும் வகுத்துள்ளது. இத்தேர்தலில், அதிகபட்சமாக 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்றும் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். நியாயமான, வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.