பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. "பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை" என பெண்கள் சொன்னதால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து அவர் தற்போது கூறுகையில், "ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோது, அது எனக்கு ஒரு மோசமான நிலைமையாகத்தான் இருந்தது. ஆனால், நான் யார்கிட்டேயும் விளக்கம் கொடுக்க வேண்டியத் தேவையும் இருக்கலை. நான் நல்லவன் என்று எல்லோருக்கும் தெரிஞ்சிருக்குங்கிறதை நினைக்கும்போது சந்தோஷமா இருந்தது" என்றார்.