தீபாவளியை ஒட்டி திருப்பூரில் நாளை (அக்., 18) முதல் 9 நாட்கள் ஊழியர்களுக்கு பனியன் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் திரும்பி வர தாமதம் ஏற்படுவதாலும், பணிகள் பாதிக்கப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் மட்டும் 22ஆம் தேதி புதன்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.