சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது. விஜய்யின் பரப்புரை வாகனங்களுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக நடத்திய கூட்டத்தில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: பாலிமர்