ரயில் பயணத்தின்போது வெயிட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டுகளை உறுதி செய்ய, IRCTC வழங்கும் 'விகல்ப்' (Vikalp) என்ற மாற்று திட்டம் பயனுள்ளதாக உள்ளது. பயணிகள் டிக்கெட்டை பதிவு செய்த பிறகு, அது காத்திருப்போர் பட்டியலில் சென்றால், இந்த 'விகல்ப்' வாய்ப்பை IRCTC இணையதளம் காண்பிக்கும். இருப்பினும், இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, நீங்கள் தேர்வு செய்த அதே ரயிலில், அதே ரயில் நிலையத்தில் டிக்கெட் உறுதி செய்யப்படுவது அரிது. மாறாக, நீங்கள் பயணிக்கும் அதே வழித்தடத்தில் செல்லும் வேறு ஏதேனும் ஒரு ரயிலில், அருகாமை ரயில் நிலையத்திலிருந்து டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.