பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கியதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். “திருமாவளவன் பயணித்த காரின் ஓட்டுநர் காரை பைக் மீது மோதியது குறித்து கேள்வி கேட்டதற்கு வழக்கறிஞர் தாக்கப்பட்டிருக்கிறார். முரண்பாடாக, திருமாவளவன் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தில் இருந்து திரும்பி வந்தார், ஆனால் அவரது ஆட்களே ஒரு வழக்கறிஞரைத் தாக்கினர்” என்றார்.