இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் UAE அணி திணறியுள்ளது. UAE அணியின் தொடக்க வீரர்கள் அலிஷான் (22), முகமது வாசீம்(19) ஆகியோர் 15 ரன்களை மட்டுமே தாண்டினார். ஆனால், அதற்குப்பிறகு பேட்டிங் செய்த ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 57 ரன்களுக்கு UAE ஆல் அவுட்டானது.