ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று (செப்.23) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி