ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று (செப்.09) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் பேட்டிங் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அந்த அணியின் செடிகுல்லா அடல் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். 189 ரன்களை நோக்கி ஹாங்காங் விளையாடுகிறது.