ஆஷஸ் தொடர்: பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹாரி புரூக் துணை கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் ஜோ ரூட், மார்க் வுட், வில் ஜேக்ஸ், மேத்யூ பாட்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆட்டங்கள் பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி