அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மகாகாளியம்மன் ஆலயத்தில், இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, காளியம்மனுக்கு தயிர், பன்னீர், பால், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதேவாரணை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.