SIR-க்கு எதிராக நேற்று (நவ.02) நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசினார். அதில், "முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே எஸ்.ஐ.ஆரை நாங்கள் வரவேற்கிறோம்" என கூறியுள்ளார்.