ஏர்டெல் நிறுவனமும் ரூ.249 ப்ளானை நிறுத்த உள்ளதாக தகவல்

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் ரூ.249 திட்டத்தை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்கி வரும் இந்த திட்டம் இன்று நள்ளிரவுடன் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜியோ ப்ரீபெய்டு பயனர்களின் மாதாந்திர குறைந்தபட்ச கட்டணம் ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோ பயனர்கள் தினசரி 1GB டேட்டா மற்றும் இலவச வரம்பில்லா அழைப்புகள் சேவையை, குறைந்தபட்சமாக ரூ.209 முதல் ரூ.249 வரை பெற்றுவந்தனர்.

தொடர்புடைய செய்தி