கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் திடீரென விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று (நவ., 04) பரங்கிப்பேட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் தலைமையில், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.