தூய்மை பணியாளர்கள் பிரச்னை தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்பிரச்னைக்கு ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து இன்று (ஆக.15) பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் பிரச்னையை வைத்து அரசியல் செய்வது அற்பமானது. தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், 11 மண்டலங்களை தனியார் மயமாக்கியதே அதிமுக தான் எனவும் விமர்சித்துள்ளார்.