'தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு 70-லிருந்து 65 ஆகக் குறைப்பு

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பை தமிழக அரசு குறைத்துள்ளது. பயனாளிகளின் வயது வரம்பு 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்கள் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், ஏற்கனவே 20 லட்சத்துக்கும் அதிகமான மூத்த குடிமக்களும் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி