பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இன்று (அக்.13) சாமி தரிசனம் செய்தார். காலையில் நடைபெற்ற வி.ஐ.பி. தரிசனத்தில் கலந்துகொண்டு, கீர்த்தி ஷெட்டி பக்திப் பரவசத்துடன் பெருமாளை வழிபட்டார். கோவிலுக்கு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இந்நிலையில், கோயிலுக்கு வெளியே ரசிகர்கள் மற்றும் பக்தர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நன்றி:NewsTamil24/7